மதுரை: மதுரை ராமகிருஷ்ண மடத்தின் ஜெயந்தி விழாவில் தலைவர் சுவாமி கமலாத்மானந்தா பேசியதாவது: ராமகிருஷ்ணர் ஹிந்து மதத்தில் ஒரு மைல் கல் போன்றவர். அவர் பிறந்த பிறகு ஹிந்து மதத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. நமது மதத்தில் நாம் உறுதியாக இருந்தாலும் மதவெறி, சகிப்புத்தன்மையின்மையை தவிர்க்க வேண்டும். நாம் இறைவனை நெருங்க நெருங்க மனநிம்மதி கிடைக்கும் என்றார். பின்னர் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது.