பதிவு செய்த நாள்
02
மார்
2020
10:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவிலில் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவிலில், ஒரு மாதத்திற்கு முன், மர்ம நபர்கள் இருவர் உள்ளே சென்று போட்டோ எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார், தீவிர விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என, கண்டுபிடிக்கப்பட்டது. பின், அக்கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.அதே போல், ஏகாம்பரநாதர், வரதராஜப் பெருமாள், கைலாசநாதர் ஆகிய நான்கு கோவில்களிலும் துப்பாக்கி ஏந்தியபோலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.இந்த பாதுகாப்பு தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணியர், அதிகம் வருகின்றனர்.விடுமுறை நாட்களில் வழக்கமான கூட்டத்தைவிட, அதிகமாக காண முடியும். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க கோபுரம் வசதி அமைக்கப்பட்டுள்ளது.