பதிவு செய்த நாள்
17
மார்
2020
03:03
பல்லடம்: உலகில் புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து கூறியுள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தை தொடர்ந்து, உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், மக்களை பீதி அடைய செய்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும், தடுப்பு நடவடிக்கை களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, உலகில் புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து சொல்லியுள்ளது. அதில், குரு - சனி கூட்டணி ஏற்பட்டு, பிரம்மஹத்தி தோஷம் பெற்று இருப்பதால், உலகத்தில் புதிய கிருமி (வைரஸ்) நோய் உருவாகும். எந்த கெட்ட பழக்கம் இல்லாதவர்களுக்கும், பிளாடர் கேன்சர் நோய், மற்றும் சிறுநீரக நோய் கடுமையாக பாதிக்கும்.
அதனால், மக்கள் கடும் அவஸ்தை பட நேரும். விஷ ஜந்துக்களால் பலவித கஷ்டங்கள் உண்டாகும் என்பது போன்ற பல்வேறு தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விகாரி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தை சீதாராமையர் கணித்துள்ளார். கடந்த ஆண்டே வெளியான ஆற்காடு பஞ்சாங்கத்தில், சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று, உலகில் ஏற்பட்டவுள்ள பல்வேறு மாற்றம் குறித்து முன்பே கணித்து கூறப்பட்டுள்ளது. அவ்வகையில், புதிய வைரஸ் உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தில் வெளியான இத்தகவல், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.