பதிவு செய்த நாள்
18
மார்
2020
02:03
காஞ்சிபுரம் : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் காஞ்சிபுரம் கோவில்கள், வெறிச்சோடி காணப்படுகின்றன. மாமல்லபுரம் சுற்றுலா பகுதியும் மூடப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், தரிசனம் செய்ய, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், நாள்தோறும் வருவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, காஞ்சிபுரம் நகரில் உள்ள பழமை வாய்ந்த கோவில்கள், வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், காஞ்சிபுரம் கோவில்களுக்கு வரும் வெளிமாநில பக்தர்கள் எண்ணிக்கை, நான்கில் மூன்று பங்கு குறைந்துவிட்டது.தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, சுகாதார துறை அறிவுறுத்தி வருகிறது. அதேபோல், மாமல்லபுரம் கலைச்சின்னங்களும், இரு வாரங்களுக்கு மூடப்பட்டு உள்ளன.