பதிவு செய்த நாள்
18
மார்
2020
02:03
வடவள்ளி: மருதமலை கோவிலில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் திருநீர் வைக்க வேண்டாமென, பூஜாரிகளுக்கு, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதாரத்துறை சார்பில், கோவில் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த, விளக்க கூட்டம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று நடந்தது.இதில், சோமையம்பா ளையம் சுகாதார ஆய்வாளர் பாலு பேசுகையில், "கோவில் வளாகம் முழுவதும், சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பக்தர்கள் பயன்படுத்தும் இடங்களில், கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பக்தர்களுக்கு, நெற்றியில் திருநீர் வைப்பதை, பூஜாரிகள் தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்கும் இடங்களில், துாய்மை முக்கியம். பணியாளர்கள், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்," என்றார்.இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) மேனகா, கண்காணிப்பாளர் செல்வராஜ், சோமையம்பாளையம் சுகாதார ஆய்வாளர் பாலு மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.