நாம் எதைச் செய்தாலும் செய்வது சரியா தவறா என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். செய்வது நல்ல விஷயமாக இருந்தால், நம் அறிவு நமக்கு தேவையான வழிமுறைகளை உணர்த்திக் கொண்டேயிருக்கும். தவறான விஷயமாக இருந்தால் இது வேண்டாம். இதைச் செய்யாதே என்று நம் அறிவு நமக்குக் கூறும். ஏன் கூடாது என்று நம் மனம் கேட்டால் அதற்கான காரணத்தையும் நம் அறிவு கூறும். அறிவு ஒரு போதும் யாருக்கும் தவறான பாதையைக்கூறுவதில்லை. அது கூறுவது தெய்வத்தின் குரல். மனசாட்சி என்றும் கூறுவார்கள். கேட்பது மனம், பதில் கூறுவது அறிவு, மனம்-மனிதன், அறிவு-கடவுள். தினமும் தான் நாம் கடவுளிடம் பேசிக் கொண்டிருக்கிறோமே! இந்த நிலையில் அறிவின் குரலையும் மீறி தவறு செய்பவர்களிடம் கடவுள் நெருங்கமாட்டார். அறிவின் குரலைத் தெய்வத்தின் குரலாக ஏற்று உண்மையாக வாழ்ந்தால், அதாவது நம் நிலையை தெய்வத்தின் நிலைக்கு உயர்த்திக் கொண்டால் கடவுளிடம் மனிதன் எப்போதும் பேசலாம்.