பதிவு செய்த நாள்
24
ஏப்
2020 
04:04
 
 செங்கல்பட்டு : ஊரடங்கு காரணமாக, மே, 3ம் தேதி வரை, அனைத்து வழிபாட்டு தலங்களில், விழாக்கள் மற்றும் பொதுமக்கள கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புனித ரமலான் நோன்பு துவங்கி நடக்கிறது. இஸ்லாமியர்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களில், நோன்பு திறக்க கூடுவதை தவிர்க்க, மத்திய வக்ப் கழகம் தடை செய்துள்ளது. இதே நிலையை, தமிழக வக்ப் வாரியமும் கடைப்பிடித்து உள்ளது. இதனால், நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் உணவு பொருட்களை, பள்ளிவாசல் நிர்வாகிகள், தன்னார்வல தொண்டர்களின் உதவியுடன், ஏழை எளிய குடும்பங்களுக்கு, வீடு வீடாக சென்று வழங்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, அனைத்து இஸ்லாமிய பள்ளி வாசல் நிர்வாகிகளும், இதை கடைப்பிடிக்க வேண்டும். கஞ்சி தயாரித்து வழங்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.