திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை... இது போல சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் மிளகு தோசை தான் நினைவுக்கு வரும். பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும் தோசைகளை எண்ணெய்யுடன் பொடி சேர்த்து பிரசாதமாக பக்தர்களுக்கு இங்கு வழங்குகின்றனர். பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயிலான இங்கு பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக இருக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத்தடை, கடன் பிரச்னை, எதிரி தொல்லை மறையும். சென்னை – திருச்சி சாலையில் செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ள இந்த ஊர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.