‘ஓம் இரண்யாய நம’ என்று தன்னுடைய பெயரைச் சொல்ல மறுத்த மகன் பிரகலாதனை அசுரனான இரண்யன் கல்லைக் கட்டி கடலில் துாக்கி்ப போட்டான். அவன் வெளியில் வர முடியாதபடி பெரிய மலையையும் வைத்து அழுத்தினான். பக்தனைக் காப்பாற்ற மகாவிஷ்ணு அம்மலையைப் பிளந்தார். இந்த இடமே விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள சிம்மாசலம் எனப்படுகிறது. இங்குள்ள நரசிம்மர் கோயில் மலையை குடைந்து பாறையால் ஆன தேரைக் குதிரைகள் இழுப்பது போல் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் கோபத்துடன் இருப்பதால் தினமும் சந்தன சாத்துபடி நடக்கிறது. நரசிம்ம ஜெயந்தியன்று நடக்கும் சந்தன அபிேஷகம் சிறப்பு மிக்கது. துன்பம் நீங்கி நிம்மதி பெற சிம்மாசலம் நரசிம்மருக்கு பக்தர்கள் இதை தரிசிக்கின்றனர்.