இந்துமதம் துறவறத்தை வலியுறுத்துவதில்லை. ஆசைகளை குறைக்கவே சொல்கிறது. இல்லறத்தை முறைப்படி நடத்த வழிகாட்டுகிறது. ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ (கைலாயத்தை ஆளும் சிவபெருமான் அன்னை பார்வதியுடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார்) என கடவுளை அம்மையப்பராக கண்டு மகிழ்ந்ததை தேவாரப்பாடலில் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். ஆணும், பெண்ணுமாக இணைந்த நிலையில் அர்த்த நாரீஸ்வரர், லட்சுமி நாராயணர் என வழிபடுவதே இல்லறத்தின் மேன்மையைக் காட்டுகிறது.