வடலுார் தருமசாலை நிறுவிய நாள் உற்சாகமின்றி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2020 02:05
வடலூர்; ஊரடங்கால் வடலுார் தருமசாலை நிறுவிய நாள் உற்சாகமின்றி கொண்டா டப்பட்டது. வடலூர் சத்திய தருமசாலை, வைகாசி, 11ம் தேதி தொடங்கப்பட்ட தினம், ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.வள்ளலார் பெருமான் பக்தர்கள் மற்றும் சன்மார்க்க நெறி பின்பற்றுவோர் கொண்டு காலையில் அகவல் பாராயணம் பாடப்பட்டு, பின்னர் தருமச்சாலை வளாகத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப் படும். பின்னர் சிறப்பு வழிபாடுகளுடன், தருமச்சாலை மேடையில் சொற்பொழிவுகளும், காலை முதல் இரவு வரை இடைவிடாமல் சிறப்பு அன்னதானமும் நடைபெறும்.குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் உற்சாகத்துடன் விழாவில் கலந்து கொள்வர். ஆனால் தற்போது கொரோனா நோய் பரவுவதை தடுக்க அமலில் உள்ள ௮ரசு ஊரடங்கால், நேற்று மிகவும் எளிமையாக விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் நடமாட்டமின்றி மிகச்சிலருடன் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, பகலில் வழக்கமாக நடைபெறும் பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. மாதா மாதம் நடைபெறும் மாதப்பூச நிகழ்ச்சிகளும் ஊரடங்கால் கடந்த இரண்டு முறை எளிமையான பூஜையுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது.