மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை மீண்டும் நிரப்ப நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2020 02:05
மதுரை, மதுரையின் குடிநீர் தேவைக்காக இன்று (மே 25) வைகை அணை திறக்கப்படுகிறது. இத்துடன் வறண்ட மாரியம்மன் தெப்பத்தை மீண்டும் நிரப்பி நிலத்தடி நீரைபெருக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வைகை ஆற்றுப்படுகை வற்றியதால் உறை கிணறுகளில் நீரின்றிமாநகராட்சிக்கு 30 எம்.எல்.டி., குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்தானதால் வைகை அணைதிறக்கப்படவில்லை. நீர் திறந்திருந்தால் மீண்டும் உறை கிணறுகளில் நீர் ஊறிமாநகராட்சிக்கு கூடுதல் குடிநீர் கிடைத்திருக்கும். மதுரை மாநகராட்சி உள்ளிட்ட மற்ற உள்ளாட்சிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை அணையை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். திறக்கப்படும் நீரை வைகையில்அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நிறுத்திநிலத்தடி நீரை பெருக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் உதவியுடன் வைகை நீரால் நிரப்பப்பட்ட மாரியம்மன் தெப்பம் கோடையால் வற்றியுள்ளது. தடுப்பணையில் இருந்து குறிப்பிட்ட அளவு நீரைதெப்பத்திற்கு திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3.5 கி.மீ., நீளமுள்ள பனையூர் கால்வாயை மாநகராட்சி துார்வாரியுள்ளது.