தேவலோகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை ... பகீரதன் தவத்தால் பூலோகத்திற்கு வருவதற்கு முன்.. சிவ பெருமான் அருளால் அவரது ஜடாமுடியில் தங்கி.. பிறகு கங்கோத்ரியில் பூமியில் இறங்கி.. தேவப்பிரயாகை..லட்சுமணன் ஜூலா.. ஹரித்வார் .. என பயணித்து வாராணாசி என்னும் காசிக்கு வருகிறாள். ..! பிறகு கங்கா சாகர் சென்று தன்னைக் கடல் அர்ப்பணித்துக் கொள்கிறாள்..! அவள் கடலை நோக்கி ஓடிவரும் இடங்களெல்லாம் புனிதத்தலங்களாக மாறின..! குறிப்பாக, வாரணாசி என்னும் காசியில் கங்கை நதிக்கரையோரத்தில் 64 கட்டங்கள் உள்ளன..! எனினும் தசாச்வமேத கட்டத்தில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது..! இது பிரம்மதேவன் அசுவமேத யாகம் செய்த இடம் என்கிறது புராணம்...!
காசியில் இந்த அசுவமேதக் கட்டம் மற்றும் சில கட்டங்களில்... (படித்துறைகளில்) மாலையில் நடைபெறும் மங்கள ஆராத்தி பூஜை மிகவும் புகழ்பெற்றது...! இந்தப் பூஜை வருடம் முழுவதும் தினமும் நடந்தாலும், கங்கை பூமிக்கு வந்த தசமியன்று மாலையில் கங்கை நதிக்குப் பூஜைசெய்து..அந்த மங்கள ஆரத்தியையும் கடைசியாக தரிசித்தால்தான் அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்கின்றன. .! வேதநூல்கள் அதுவும் பாபஹர தசமி அன்று விரதம் மேற்கொண்டுவழிபடுவது மிகவும் சிறப்பு !! பாபஹர தசமி என்றால் பத்துப் பாவங்களைப் போக்கும் தசமி என்று பொருள்..!
வாக்கில் செய்வது நான்கு.. சரீரத்தால் செய்வது மூன்று.. மனத்தால் இழைப்பது மூன்று... தெரிந்தோ தெரியாமலோ செய்யும் இந்த பத்துப் பாவங்களைப் போக்கிக் கொள்ள பாபஹர தசமி உதவுகிறது...! (வாக்கினால் செய்வது: கடுஞ்சொல், உண்மையில்லாத பேச்சு, அவதூறாகப் பேசுவது, அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.) (சரீரத்தால் செய்வது மூன்று: நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக்கொள்வது; அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது; பிறர்மனை நோக்குவது.) (மனத்தால் இழைக்கும் பாவங்கள் மூன்று; மற்றவர் பொருளை அடைய திட்டமிடுவது; கெட்ட எண்ணங்களை நினைத்தல்; பிறபொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.) மேற்கண்ட பத்துப் பாவங்களும் குறிப்பிட்ட புண்ணிய காலமான பாபஹர தசமியன்று கங்கை நதியில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்..! அந்த தினத்தில் காசிக்குச்சென்று கங்கையில் நீராடுவது எல்லாருக்கும் இயலாத காரியம் ..! எனவே, அந்தப் புண்ணிய காலத்தில் அவரவர் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள புனித நதியிலோ, குளத்திலோ நீராடலாம்..! நதியிலும் குளத்திலும் நீரில்லாது போனாலும், சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து.. இனிமேல் பாவங்கள் செய்யமாட்டேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வீட்டில் வடக்குதிசை நோக்கிக் குளித்தாலும் ... பாவங்கள் நீங்கும் என்று சாத்திரம் கூறுகிறது. அன்னதானம் செய்வது.. ஏழை எளியவர்களுக்கு ஆடைகள் தானம் செய்வதுநமக்கு புனிதம் சேர வழிவகுக்கும்.
தீபாவளி நாள் போல் அனைத்து நீர் நிலைகளில் கங்கையின் ஸாந்நித்தியம் உண்டு யாம் காஞ்சித் ஸரிதம் ப்ராப்ய தத்யாதர்க்யம் ஸுபோதகம் முச்யதே தசபி பாபை ஸ மஹா பாதகோபமை என்று ஏதாவது ஒரு நீர் நிலைகளில் ஸ்நானம் செய்து அர்க்யம் தருபவன் மஹாபாபங்களுக்கு சமமான பத்துவித பாவங்களிலிருந்து விடுபடுவான் ஆகவே இந்த நாளுக்கு பாபஹரா தசமி என்று பெயர்.