பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
01:06
மாமல்லபுரம்: தொல்லியல் சின்னங்களை, நேற்று முதல் திறக்க, மத்திய அரசு உத்தரவிட்டும், கொரோனா பரவலால், மாமல்லபுரம் சிற்பங்கள் திறக்கப்படவில்லை.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், மத்திய அரசு, அனைத்து பாரம்பரிய சின்னங்களையும், நேற்று முதல் திறக்க உத்தரவிட்டது.ஆனால், கொரோனா தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில், இம்மாதம் இறுதி வரை, கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், மாமல்லபுரம் கலை சின்னங்கள் திறக்கப்படாது என, தொல்லியல் துறை கூறியுள்ளது.மேலும், இத்துறையின் கீழ் உள்ள, வழிபாட்டு கோவில்களும் திறக்கப்படாது என, அறிவித்துள்ளது. இது குறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:தொல்லியல் சின்னங்களை திறக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை, கொரோனா கட்டுப்பாடு பகுதியாக, தமிழக அரசு அறிவித்துள்ளதால், இப்பகுதி சின்னங்களை, இம்மாத இறுதி வரை திறக்க மாட்டோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.