பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
01:06
பேரூர்: பேரூர் கோவில் தேர்களுக்கு, நிரந்தர ஷெட் அமைக்கும் பணி, தீவிரமாக நடக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு டிச.,ல், ரூ. 64 லட்சம் மதிப்பீட்டில், 18 மீ., உயரம், 12மீ., அகலம், 24மீ., நீளத்தில் தேர்களுக்கு, நிரந்தர ஷெட் அமைக்கும் பணி துவங்கியது. கொரோனா காரணமாக, நடப்பாண்டு தேர்த்திருவிழா ரத்தானதுடன், ஷெட் அமைக்கும் பணியும் பாதிக்கப்பட்டது. தற்போது, ஷெட் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.ராட்சத கிரேன்களின் உதவியுடன், துாண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பணிகளை விரைந்து முடித்து, தேர்கள் பாதுகாக்கப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.