பதிவு செய்த நாள்
01
ஜூலை
2020
03:07
மேட்டுப்பாளையம்: காரமடை நஞ்சுண்டேஸ்வரர், சந்தான வேணுகோபால் ஆகிய கோவில்களில் இருந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணியதில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இருந்தது. காரமடை நஞ்சுண்டேஸ்வரர், சந்தான வேணுகோபால் ஆகிய இரு கோவில்களும், அரங்கநாதர் கோவிலின் உப கோவில்களாகும். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இரு கோவில்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கு பிரச்னையால், கோவில்கள் அடைக்கப்பட்டன. இதனால் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது தடைபட்டது. இந்நிலையில் நேற்று இரு கோவில்களிலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது நடந்தது. காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் தலைமையில், கோவில் இன்ஸ்பெக்டர் சரண்யா, கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 117 ரூபாயும், சந்தான வேணுகோபால் கோவிலில், 20 ஆயிரத்து, 097 ரூபாய் பக்தர்கள் செல்லுத்திய காணிக்கை இருந்தது.