பதிவு செய்த நாள்
01
ஜூலை
2020
03:07
மதுரை; காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்த ஆண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி தேனம்பாக்கம் சிவஸ்தானத்தில், ஜூலை, 5 முதல், செப்., 2 வரை மேற்கொள்கிறார்.
மகாபாரதம் தந்த வியாசருக்கு நன்றி செலுத்தும் விதமாக, சாதுர்மாஸ்ய விரதம், பூஜைகள் நடக்கின்றன. இப்புண்ணிய காலத்தில், சிறந்த விரதம் கடைப்பிடிக்கும் தவசீலர்கள், ஆச்சார்யர்களை தரிசித்து, வணங்கி தொண்டு புரிவது, பக்தர்களுக்கு நன்மை தரும்.இவ்விரதம், ஜூலை 5ல் வியாச பூஜையுடன் துவங்கி, செப்., 2ல் விஸ்வரூப யாத்திரையுடன் நிறைவடைகிறது. பூஜையில், பகவத்பாதர்கள் கைலாசத்தில் இருந்து கொண்டு வந்த, மகாதிரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் யோக லிங்கத்திற்கு, நித்ய முக்கால பூஜையுடன், ரங்க பாஷ்ய பாடமும் நடக்கும்.தினமும் உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆக., 5ல் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 86வது ஜெயந்தி தின விழா ஹோமங்கள், பாராயணங்கள் நடக்கின்றன. தற்போதைய சூழலில், பக்தர்கள் வீட்டில் இருந்து, பிரார்த்தனை செய்து இறையருள் பெற வேண்டுகிறோம் என, மடத்தின் நிர்வாகி, விஸ்வநாத ஐயர் தெரிவித்துள்ளார்.