Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டாவக்கிரர் பரீட்சித்து பரீட்சித்து
முதல் பக்கம் » பிரபலங்கள்
ராவணன்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மே
2012
05:05

ராவணன் கதறிக் கொண்டிருந்தான். சிவபெருமானே! ஆணவத்தால் அழிந்தேன்! தாங்கள் குடிகொண்டிருக்கும் கயிலாய மலையின் பாரம் தாங்காமல் ஆற்றல் இழந்தேன். ஆயிரம் ஆண்டுகாலமாக, என் கைகள் மலையிடுக்கில் சிக்கி நைந்து போய்விட்டதே! நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளியேறுகிறதே! கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் கரைந்து விடும் போல் இருக்கிறதே! என்னை விடுவியுங்கள்! தாங்களே உயர்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டேன். நந்தீஸ்வரன் மீது கொண்ட கோபத்தால், உங்கள் இருப்பிடத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றேன். தவறு தான். மன்னியுங்கள். என்னை விட்டு விடுங்கள்... பக்தனின் அவலக்குரல் சிவபெருமானின் காதுகளில் விழுந்தது. ஆனால், சிவன் சொத்து குலநாசமாயிற்றே! சிவனின் இருப்பிடத்தில் யார் கை வைக்கிறார்களோ, அவர்களின் குடும்பம் நன்றாக இருக்காது. குறிப்பாக, சாகும் நேரத்தில் கடுமையான வேதனைகளைச் சந்திக்க நேரிடும். வழி வழியாக இது தொடரும். தனக்கு நேர்ந்த இந்த அவலம், தன்னை மட்டுமின்றி தன் பிள்ளையான இந்திரஜித் போன்றவர்களையும் தாக்குமோ என்ற கவலை வேறு அவனுக்கு. நடந்தது இது தான். குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம் மூலம் ராவணன் வானில் பவனி வந்து கொண்டிருந்தான். இடையில் கயிலாய மலை குறுக்கிட்டது. அதைச் சுற்றிச் செல்ல ராவணனுக்கு கவுரவக்குறைச்சலாக இருந்தது.

சிவனிடம் பெற்ற வரத்தின் பலனால், சகல உலகங்களையும் அவன் அடிமைப்படுத்தி வைத்திருந்தான். நவக்கிரகங்கள் கூட அவனுக்கு அடிமைப்பட்டிருந்தன. அவன் சிம்மாசனம் ஏறும் போது ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு கிரகநாயகரும் வந்து படுத்துக் கொள்வார்கள். அவர்களின் முதுகின் மேல் அவன் ஏறிச்செல்வான். சிவபக்தர்கள், நவக்கிரகங்களைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்பது இதன் தாத்பர்யம். அவனது தந்தை விச்வரஸும் சிறந்த சிவபக்தர். வழிவழியாக சிவ பக்தர்களாக இருந்ததால், வலிமை மிக்கவர்களாக அவர்கள் விளங்கினர். ஆனால், விதி விடுமா! வரம் தந்த சிவனின் இருப்பிடத்தையே அலட்சியப்படுத்தினான் அவன். அப்போது, கயிலாயத்தின் காவலரான நந்தீஸ்வரர், ராவணனிடம், ராவணா! நீ சிறந்த சிவபக்தன் என்பதை நான் அறிவேன். இவ்வழியாக வருபவர்கள் கயிலாய மலையைச் சுற்றிச் செல்வதே வழக்கம். நீயும் அப்படியே செல். அதுதான் முறை, என்றார் பவ்வியமாக. ராவணனுக்கு கோபம் வந்து விட்டது. காளை முகம் கொண்ட நந்தியை, குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, எனக்கே புத்தி சொல்கிறாயா! போடா குரங்கே! என கடுமையான வார்த்தைகளால் திட்டினான். ஒருவர் அழகில்லாமலோ, உடல் குறையுடனோ இருந்தால் அவர்களின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவது பெரும் பாவத்தைக் கொண்டு வரும். ராவணன் தேவையில்லாமல் நந்திஸ்வரரைத் திட்டியதால் அவனது தவவலிமை குறைந்தது. நந்தீஸ்வரர் பெரும் வயிற்றெரிச்சலுடன், ஏ ராவணா! என்னைக் குரங்கென்று பரிகாசம் செய்த நீயும், உன் தேசமும் அதே குரங்குகளால் அழிந்து போவீர்கள்! என்று சாபமிட்டார். நாம் ஒருவரைப் பழித்தால், என்ன சொல்லி பழிக்கிறோமோ, அதே பழி நம்மையே திரும்பத் தாக்கும். அதன்படி இலங்கை ஆஞ்சநேயர் உள்ளிட்ட வானரங்களால் அழிந்தது பின்னால் நடந்த கதை. ராவணன் நந்தீஸ்வரரை மீறி கயிலாய மலையைக் கையால் தூக்கினான். அப்போது, சிவ பெருமான் தன் பெருவிரலால் மலையை அழுத்த, இடுக்கில் கை சிக்கிக் கொண்டது. மாட்டிக் கொண்டவன் அலறினான். பிறகு தனது நரம்பை கம்பியாக்கி, ஒரு கையை மீட்டும் தண்டாக்கி சாமகானம் இசைத்து இறைவனை மகிழ்வித்தான். இசைக்கு வசமான சிவனும் அவனை விடுவித்தார்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar