உளுந்துார்பேட்டை : வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என டி.எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்துள்ளார். நேற்று அவர், நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வழிபடலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை.ஓரிரு நாட்களில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விழா குறித்து அறிவுறுத்தப்பட உள்ளது என்றார்.