Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பயம் போக்கும் பைரவர் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
ஒளிமயமாக வாழ ஓணத்தன்று பாடுங்க!
எழுத்தின் அளவு:
ஒளிமயமாக வாழ ஓணத்தன்று பாடுங்க!

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
06:08

வாமனர் மீது நம்மாழ்வார் பாடிய பாசுரம் இது.  

உருகுமால் நெஞ்சம் உயிரின் பாரமன்றி
பெருகுமால் வேட்கையும் என்செய்கேன் தொண்டனேன்
தெருவெல்லாங் காலிகழ் திருக்காட்கரை
மருவிய மாயன்றன் மாயம் நினைதொறே.

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சிடிந்துருகும்
வினைகொள் சீர்பாடிலும் வேமெனதாருயிர்
கனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா
நினைகிலேன் நானுனக்கு ஆட்செய்யும் நீர்மையே.

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை
ஈர்மைசெய்து என்னாயிராம் என்னுயிருண்டான்
சீர்மல்கு சோலைத் தென்காட்கரையென்னப்பன்
கார்முகில் வண்ணன்றன் கள்வமறிகிலேன்.

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறிகமழ் சோலைத் தென்காட்கரை யென்னப்பன்
சிறிய வென்னாயிருண்ட திருவருளே.

திருவருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமுமாருயிரும் உடனே யுண்டான்
திருவளர் சோலைத் தென்காட்கரை யென்னப்பன்
கருவளர்மேனி என்கண்ணன் கள்வங்களே

என்கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மை யெதிப் புலம்பி இராப்பகல்
என்கண்ணன் என்று அவன் காட்கரையேத்துமே.

காட்கரையேத்தும் அதனுள் கண்ணாவென்னும்
வேட்கை நோய்கூர நினைந்து கரைந்துகும்
ஆட்கொள்வான் ஒத்து என்னுயிருண்ட மாயனால்
கோட்குறைபட்டது என்னாருயிர் கோளுண்டே.

கோளுண்டானன்றி வந்து என்னுயிர் தானுண்டான்
நாளுநாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர்மேகத் தென்காட்கரை யென்னப்பற்கு
ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே.

ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது
பேரிதழ்த் தாமரைக்கண் கனி வாயதோர்
காரெழில் மேகத் தேன்காட்கரைகோயில் கொள்
சீரெழில்நால் தடந்தோள் தெய்வவாரிக்கே.

வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று
ஆர்வற்றவென்னை யொழிய என்னில் முன்னம்
பாரித்து தானென்னை முற்றப் பருகினான்
காரொக்கும் காட்கரையப்பன் கடியனே.

 
மேலும் துளிகள் »
temple news
விக்னங்களுக்கு அதிபதியான விநாயகரை வழிபட சிறந்த நாள் சதுர்த்தி. அனைத்து விதமான துன்பங்களையும் ... மேலும்
 
temple news
வைகாசி முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.  விஷ்ணுவை பூமிக்கு அழைக்கும் விரதமே விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற பலமுறி கணபதி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தாய் மனம் குளிர தமிழில் அர்ச்சனை நடக்கும் பெருமைக்குரியது ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இது, ... மேலும்
 
temple news
பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar