பதிவு செய்த நாள்
13
செப்
2020
07:09
உடுமலை: கொரோனா ஊரடங்கு காரணமாக, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலை நேரடியாக தரிசிக்க முடியாமல், பலரும் மனவேதனை அடைந்துள்ளனர். இந்த சூழலில், பக்தர்களுக்கான காசி விஸ்வநாத சுவாமிகளின் தீர்த்த பிரசாதம் வீட்டுக்கு தேடி வந்து வழங்க, தபால் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், The SSPOs, Varanasi East Division, Varanasi 221001 என்ற முகவரிக்கு, Electronic Money Order ஆக 251 ரூபாய் அனுப்ப வேண்டும். அதில், பயனாளிகளின் வீட்டு முகவரி, தொலைபேசி எண்களை சரியாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.கூடுதல் தகவல்களுக்கு, 0542 2401630, 2504164 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் தெரிவித்துள்ளார்.