Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: கையில் பணப்புழக்கம் சிம்மம்: குழந்தை பாக்கியம் சிம்மம்: குழந்தை பாக்கியம்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம்: பதவி உயர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம்: பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

16 செப்
2020
08:09

சுக்கிரன் இந்த மாதம் செப்.29ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சனி,ராகு, சூரியனாலும் நற்பலன் கிடைக்கும். புதன் செப்.21–  அக். 7 வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். எடுத்த செயலையும் வெற்றிகரமாக முடிக்கலாம். கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட பண விரயம் மறையும். அவரால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். புதனால் இருந்த அக்கம் பக்கத்தினரின் தொல்லை செப்.21க்கு பிறகு மறையும். மாத பிற்பகுதியில் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.


குடும்பத்தில் உங்கள் ஆற்றல் மேம்படும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என அடிக்கடி செல்வீர்கள். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். இதனால் வாழ்வில் வளம் காண்பீ்ர்கள். செப்.20க்கு பிறகு  தம்பதியிடையே அன்பு பெருகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பெண்கள் அபார ஆற்றலுடன் செயல்படுவர்.  குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பத்தினர் பெருமை காண்பர். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம்.சகோதரரால் பணஉதவி கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானத்தைக் காண்பர். அக்.7க்கு பிறகு பணிபுரியும் பெண்கள் வேலையில் கவனமாக இருக்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. உடல்நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். கண் தொடர்பான நோய்கள் பூரணமாக குணம் அடையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். அதே நேரம் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். புதனால் ஏற்பட்ட எதிரி தொல்லை, அனுகூலமற்ற போக்கு செப். 20க்கு பிறகு மறையும்.
* வியாபாரிகள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபார நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். செப்.28க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. a
* அரசு பணியாளர்கள் செப்.28க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். புதிய பதவி தேடி வரும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு செப்.21 –  அக்.7 வரை சாதகமான காலகட்டமாக இருக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு செப்.28 க்குப் பிறகு எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
* மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* வக்கீல்களுக்கு பணவரவு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தட்டிப் பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகள் பாசிப்பயறு நெல், எள், உளுந்து, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக ஆதாயம் காண்பர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* மாணவர்கள் செப். 21 –  அக். 7 வரை  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும்.
   
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் அக்.7க்கு பிறகு வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு அக்.7க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
* ஆசிரியர்கள் வீண்விவாதங்களை தவிர்க்கவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
* போலீஸ், ராணுவத்தினருக்கு பணியில் கூடுதல் அக்கறை தேவை. வேலையில் பொறுமையும்,  நிதானமும் அவசியம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும்.
 நல்ல நாள்:  செப்.18,19,24,25,26,27,28 அக். 3,4,5,6,7,11,12,15,16.
  கவன நாள்: செப். 29,30 சந்திராஷ்டமம்

  அதிர்ஷ்ட எண்:7,9 நிறம்: பச்சை, வெள்ளை


பரிகாரம்:
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் விளக்கு
* திங்கட்கிழமை சிவனுக்கு வில்வ மாலை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar