பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழா நடந்தது. கள்ளக்குறிச்சி விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம் சார்பில் காமாட்சி அம்மன் கோவிலில் விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6.30 மணிக்கு விஸ்வகர்ம சுப்ரபாதம், கொடியேற்றுதல், காலை, 7:00 மணிக்கு மணிக்கு விஸ்வகர்ம அனுக்ஞை, விஸ்வேஸ்வரர் பூஜை, விஸ்வ கணபதி பூஜை, புண்யாகவாஜனம், கடஸ்தாபனம், விஸ்வகர்ம சகஸ்கர நாமபாராயணம் உள்ளிட்டவை நடந்தது.காலை, 11:00 மணிக்கு தீபாராதனை, புஷ்பாஞ்சலி, அன்னதானம் நடத்தப்பட்டது. வழிபாடுகளை ராஜகோபால் சிவாச்சாரியார் குழுவினர் செய்து வைத்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலு தலைமையிலான விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழாக்குழு செய்து இருந்தது. தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், தொழிலதிபர் தங்கராசு, வழக்கறிஞர் ராமலிங்கம், சேகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.