பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
கள்ளக்குறிச்சி; நீலமங்கலம் கருப்பனார் கோவில் கும்பாபிேஷக ஆண்டு பூர்த்தி வைபவம் வேத முறைப்படி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் கருப்பனார் கோவில் கும்பாபிேஷகம் ஓராண்டு பூர்த்தியையொட்டி, சம்மஸ்ர ஆண்டு பூர்த்தி வைபவம் நடத்தினர்.நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம், வாஸ்து சாந்தி, புற்று மண் எடுத்தல், அங்குரார்பனம் பூஜைகள் நடந்தது. அதன்பின் 3 கலசங்களில் விநாயகர், கருப்பனார், தொப்பையத்தாய் தெய்வங்களை ஆவாஹனம் செய்து, யாக சாலை பிரவேசம் செய்து, யாக மேடையில் கலசங்களை பிரதிஷ்டை செய்தனர். தத்துவார்ச்சனை, வேதிகை அர்ச்சனை செய்து யாகம் நடந்தது.நேற்று காலை பசு பூஜை, சூரிய பூஜை, கும்ப பூஜை நடந்தபின் யாகம் நடத்தி, மகா பூர்ணாகுதி சேர்ப்பித்தனர். யாத்ரா தானத்திற்கு பின், விநாயகர், கருப்பனார், தொப்பையத்தாய் தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிேஷக பூர்த்தி வைபவம் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.