கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி மலைக்கோவில் கும்பாபிேஷகம் நிறைவடைந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
இக்கோவில் கும்பாபிேஷகத்துக்காக திருப்பணி துவங்கியது.கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து கோவில்கள் திறக்கவும், பணிகள் செய்யவும் அரசு அனுமதியளித்தது. மலைக்கோவில் மேல் பகுதியில், 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்தது.இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று பூஜையை துவக்கி வைத்தார். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., சண்முகம், முன்னாள் அமைச்சர் தாமோதரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி பொறியாளர் பரிமளம், ஆய்வாளர் கதிரேசன், பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி, செயல்அலுவலர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.