சுற்றுச்சூழல் காக்கும் அற்புத பணியில் மரங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மரங்களின் தேவை பற்றிய விழிப்புணர்வு இன்றி வெட்டப்பட்டு வருவது வேதனைக்குரியது. தண்ணீர் இல்லாமல் இருக்கின்ற மரங்களையும் காப்பாற்ற முடியவில்லை. நீர் நிலைகளை துார் வாரி நிலத்தடி நீராதாரம் காக்க சுற்றுச்சூழல் காக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த வரிசையில் சிவகாசி அனுப்பன்குளம் தெப்பக்குளம் சமூக ஆர்வலர்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இது 500 ஆண்டு பழமையானது.25 ஆண்டுகளாக கிராமங்களின் குடிநீரா தாரமாக இருந்தது. தற்போது பராமரிக்காமல் துார்ந்து போனது. தன்னார்வலர்கள் முயற்சியால் ரூ.15 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுஉள்ளது. கரைகளில் தன்னார்வலர்கள் க்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
பசுமையாக்குவதே நோக்கம்: தன்னார்வலர்கள் பொறியாளர் ராகவன், சுதாகர், அய்யப்பன், கடைமுருகன், சிவபெருமாள் உள்ளிட்டோர் தங்களுக்குள் பணம் வசூலித்து தெப்பத்தை துார்வாரினர். கரையை சுற்றி நடை மேடை, பூங்கா அமைக்க எம்.எல்.ஏ., ராஜவர்மன் முயற்சி எடுத்து வருகிறார். கிராமத்தை பசுமையாக்குவதே நோக்கம். பாண்டியராஜ், சமூக ஆர்வலர், அனுப்பன்குளம்