Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 மிதுனம் :  குரு பெயர்ச்சி 2020 - 2021 மிதுனம் : குரு பெயர்ச்சி 2020 - 2021
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை)
ரிஷபம்: குரு பெயர்ச்சி 2020 - 2021
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
06:42

கார்த்திகை 2, 3, 4ம் பாதம் : ஒன்பதாமிட குரு உயர்வு தரும்

பொது : குருவின் சிறப்புப் பார்வையினைப் பெறுவதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பாக்ய ஸ்தானத்தில் குருவின் அமர்வு அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தருணம் என்பதால் புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். ஜென்ம ராசியில் நீச பலத்துடன் அமர்ந்திருக்கும் ராகு நெகட்டிவ் சிந்தனைகளைத் தந்தாலும், குருவின் பார்வை பலம் ராகுவை பாசிட்டிவ் ஆக செயல்பட வைக்கும். சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும், சுக்ரனை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வெற்றியைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

நிதி : அஷ்டமத்து குரு விலகியிருப்பதால் அநாவசிய செலவுகள் குறையும். சேமிப்பில் உயர்வினைக் காண்பீர்கள். அதே நேரத்தில் நிதி நிலையை வேகமாக உயர்த்த வேண்டி ராகு தரும் குறுக்கு வழிகளை கையில் எடுப்பது கூடாது. அதிகமாக ஆசைப்பட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பண விவகாரங்களை தகுந்த துணையுடன் கையாள்வது நல்லது.

குடும்பம் : பிடிவாத குணத்தினை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்துவதால் அவ்வப்போது பிரச்னைகள் உருவாகும். இருந்தாலும் ஜென்ம ராசியின் மீது விழும் குருபகவானின் பார்வை உங்கள் மனதில் நல்லெண்ணெத்தை உருவாக்கும். தம்பதியருக்குள் பிரச்னை உருவாகும்போது நீங்கள்தான் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். உடன்பிறந்தோர் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கல்வி : இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் புத்திகூர்மை அதிகரிக்கக் காண்பீர்கள். அறிவியல் பிரிவு மாணவர்கள் அபார வளர்ச்சியினை அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். மாணவர்களிடையே தேசபக்தி கூடும். என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட், கைடு போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவ, மாணவியர் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவது நல்லது. பேச்சினில் அடக்கம் தேவை. கிண்டலாகப் பேசும் வார்த்தைகள் மற்றவர் மனதைப் புண்படுத்தக் கூடும். தங்கம், வெள்ளி நகைகள் சேரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கச் செல்லும்போது தகுந்த துணையுடன் செல்ல வேண்டியது அவசியம்.
உடல்நிலை : ராகுவின் நீச பலத்தினால் உடல்நிலையில் சிரமம் தோன்றினாலும் குருவின் பார்வை உங்களை காக்கும். தொற்று நோய்க்கான வாய்ப்பு உண்டு என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. பெண்கள் தலையில் பேன், பொடுகு தொல்லையால் அவதிப்படுவர். 24.05.2021 முதல் 24.07.2021 வரை உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.

தொழில் : அலுவலகத்தில் உடன் பணிபுரிவோருடன் உண்டாகும் பிரச்னையின் காரணமாக இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவதால் பதவி உயர்விற்கான வாய்ப்பிற்கு போராட வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் அதிக அலைச்சலைக் காண நேர்ந்தாலும் அதற்குரிய தனலாபத்தினையும் காண்பார்கள். ஷேர்மார்க்கெட், ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம் : ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தினமும் ஜபிப்பதோடு சிவவழிபாடு செய்து வர வெற்றி சாத்தியமாகும்.

ரோகிணி : மனதில் மகிழ்ச்சி குடிபுகும்

பொது : கடந்த சில காலமாக தடைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சாதகமான பலனை உண்டாக்கும். ஒன்பதாம் பாவகத்திற்கு வரும் குரு உங்கள் முயற்சிகளுக்குத் துணை நிற்பார். தடை விலகுவதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நான்கு பேர் மத்தியில் உங்களை முன்னிறுத்தி செயல்படுவீர்கள். தனலாபம் குறைவாக இருந்தாலும் பெயரும் புகழும் சம்பாதிப்பீர்கள். சந்திரனை நட்சத்திர அதிபதி ஆகவும் சுக்ரனை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி குடிபுகும் நேரம் இது.

நிதி : ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டால் நிதி நிலை நன்றாகவே உயர்வடையும். வீண் பகட்டிற்காக ஆசைப்படாமல் தேவைக்கு மட்டும் செலவழிப்பதை வழக்கத்தில் கொள்ளுங்கள். தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வது நன்மை தரும். ஷேர் மார்க்கெட், ம்யூச்சுவல் பண்டு முதலீடுகள் எதிர்காலத்திற்கு பயன்தரும் வகையில் அமையும். கிரெடிட் கார்டு உபயோகத்தின் போது எச்சரிக்கையுடன் கூடிய சிறப்பு கவனம் அவசியம் தேவை.

குடும்பம் : குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்க முயற்சிப்பீர்கள். அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராகப் பேசும்போது மனம் உடைந்து போகிறீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றுத் தரும். உறவினர்களிடம் பேசும்போது அதிக எச்சரிக்கை தேவை. சுபநிகழ்வுகளில் முன்னின்று செயல்பட்டு எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள்.

கல்வி : மாணவர்கள் கலந்துரையாடல் மூலம் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்வார்கள். ஆசிரியர்களிடம் தர்க்கத்தில் ஈடுபடாமல் பணிவோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வேதம், ஜோதிஷம் பயிலும் மாணவர்களுக்கு முக்கியமான நேரமாக அமையும். கலைத்துறை சார்ந்த மாணவர்கள் சாதிப்பார்கள். இன்ஜினியரிங் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்கள் : வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பலவீனம் அடைகிறீர்கள். இடம், பொருள் அறிந்து பேச வேண்டியது அவசியம். அநாவசியமான பேச்சின் மூலம் அவப்பெயர் உண்டாகலாம். வீண்வதந்திகளால் ஒரு சில சிரமத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு உண்டு.


உடல்நிலை : வயிறு சார்ந்த பிரச்னைகள், வாயுப்பிடிப்பு ஆகியவற்றால் அவதிப்பட நேரிடலாம். எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் மன நிலையில் ஒரு சில பிரச்னைகள் தோன்றக்கூடும். கவனம் தேவை.

தொழில் : ஜனவரி  ஆறாம் தேதி முதல் தொழில்முறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எல்லோருடன் எளிதாகப் பழகி வருவதன் மூலம் அலுவலகத்தில் நற்பெயர் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் முகராசியின் மூலம் முன்னேற்றம் கண்டு வருவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்குவழக்குகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விவசாயம், மளிகை, ஹோட்டல் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்து வாருங்கள்.

மிருகசீரிடம் 1, 2ம் பாதம் : செலவுக்கேற்ப வருமானம் கூடும்

பொது : அஷ்டமத்துச் சனி மற்றும் குருவினால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஆறுதல் தரும் வகையில் அமையும். மனதில் இருந்து வந்த சந்தேகங்கள் விலகி மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குருவின் பார்வை பலம் புதிய உற்சாகத்தைத் தரும். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும், சுக்ரனை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் அன்பிற்கு மட்டும் கட்டுண்டு நடப்பீர்கள். இருந்தாலும் ஒரு சில நேரத்தில் உள்ளுணர்வையும் மீறி அவசரப்பட்டு செயல்படுவதால் ஒரு சில இழப்புகளை சந்தித்து வருகிறீர்கள்.

நிதி : சேமிப்பில் பெரிதாக உயர்வினைக் காண இயலவில்லை என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். முதலில் செலவுக்கணக்கு மனக்கண் முன்பு வந்து நின்றாலும் அதற்கேற்ற பொருள்வரவினையும் உடனடியாகக் காண்பீர்கள். பணம் கொடுக்கல்,வாங்கல் சார்ந்த விவகாரங்களில் புதிய நபர்களை நம்பி செயல்படுவது நஷ்டத்தைத் தந்துவிடும். மாற்று மதத்தினருடன் நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இறங்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குடும்பம் : குடும்பத்தினரிடம் அதிகாரத்தை விடுத்து அன்போடு பேசி வருவதன் மூலம் பல பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இயலும். உடன்பிறந்தோர் வழியில் ஒரு உபத்திரவத்தை சந்திக்க நேர்ந்தாலும் சமாளிப்பீர்கள். உறவினர்கள் வழியில் கலகம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் உறவினர்கள் மூலம் உண்டாகும் பிரச்னைகளை வெற்றி கொள்ள இயலும். ஒரு சிலருக்கு தாத்தா, பாட்டி வழி சொத்து எதிர்பாராத வகையில் நற்பலனைத் தரும்.

கல்வி : இன்ஜினியரிங் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். மருத்துவம் பயிலும் மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மார்ச் மூன்றாம் தேதி முதல் சிறப்பான நேரம் துவங்குவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வதன் மூலம் கல்வி நிலையில் சிறப்பான வளர்ச்சியைக் காண இயலும்.

பெண்கள் : வீண் பேச்சினைத் தவிர்ப்பதன் மூலம் பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. அவர்களுக்கு செய்யும் சேவை நிறைவான மன நிம்மதியைத் தரும். தம்பதியருக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் காணாமல் போகும். மே  24ந் தேதி முதல் குடும்பத்தில் உங்கள் தனிப்பட்ட முயற்சியால் செல்வச் சேர்க்கை உண்டாகக் காண்பீர்கள்.

உடல்நிலை : ஜென்ம ராசியில் ராகுவின் அமர்வினால் உடல்நிலையில் சிறு சிறு குறைகளைக் கண்டு வந்தாலும் குருவின் பார்வை அவற்றை நிவர்த்தி செய்யும். உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவது நல்லது. உடம்பின் மேற்தோலில் உண்டாகும் அலர்ஜிகளை உடனுக்குடன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.
தொழில் : சுயதொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. போக்குவரத்துத் துறை பணியாளர்கள் புதிய சாதனை படைப்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன்பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதன் மூலம் நற்பெயர் காண்பர். டிராவல்ஸ், கூரியர், பார்சல் சர்வீஸ், எலக்ட்ரிகல்ஸ் துறையைச் சேர்ந்தவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
பரிகாரம் : கண்ணனை வழிபட கவலைகள் தீரும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) »
temple
அசுவனி: தொழிலில் வளர்ச்சிபொது : இதுநாள் வரை குருவின் பார்வை பலத்துடன் செயல்பட்டு வந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : பொறுமையே பெருமை தரும் பொது : இதுநாள் வரை இருந்து வந்த குருவின் பார்வை ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : குரு பார்க்க கோடி நன்மை பொது : ராகு,கேதுப் பெயர்ச்சியினால் சாதகமான பலன்களை ... மேலும்
 
temple
மகம் : குருபார்வையால் சுபநிகழ்ச்சிபொது : கடந்த ஒரு வருட காலமாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த ... மேலும்
 
temple
உத்திரம் 2, 3 4ம் பாதம் : அதிர்ஷ்ட வாய்ப்புபொது : ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.