வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உழவார பணிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2020 01:11
கள்ளக்குறிச்சி : வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சென்னை தொண்டர் உழவார திருக்கூட்டம் சார்பில் உழவார பணிகள் மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் பராமரிப்பின்றி தொன்மை இழந்து காணப்பட்டது. கோவில் வளாகத்தில் செடி கொடிகள் மற்றும் முட்கள் வளர்ந்தும், கோவில் கட்டடத்தில் செடிகள் வளர்ந்தும் இருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில், முற்றிலும் தொன்மை இழந்து காணப்பட்டது தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையொட்டி, சென்னை தொண்டர் உழவார திருக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சிவபாலா தலைமையிலான குழுவினர் பலர் கோவில் வளாகம் முழுவதும் நேற்று சுத்தம் செய்து உழவார பணிகள் மேற்கொண்டனர். கோவில் உழவார பணியில் இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்று ஒருங்கிணைத்தனர்.