கூடலூர்: கூடலூர், முக்கூடல் லிங்கேஸ்வரர் திருக்கோயில், லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம் திருவிழா நேற்று முன்தினம், நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து 11:30 மணிக்கு லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரத்துடன் அன்னாபிஷேகம் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோன்று நம்பாலகோட்டை சிவன்மலையில் உள்ள, சிவனுக்கு அன்னபிஷேகம் பூஜை சிறப்பாக நடந்தது.