பதிவு செய்த நாள்
20
நவ
2020
11:11
திருவண்ணாமலை:திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா இன்று, 20ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 29ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில், 6 அடி உயர கொப்பரையில், 1,000 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்ட திரி கொண்டு, மஹா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் இந்த தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். மஹா தீபத்துக்காக ஆவினிலிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களிடம் நேரடி நெய் காணிக்கை பெறப்பட்டு வருகிறது. நெய் காணிக்கைக்கு பணமாகவும் பெறப்படுகிறது. ஆன்லைனிலும் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.