சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வாய்மூடி சித்தர் 107 வது குருபூஜை விழா நடந்தது. சேத்தியாத்தோப்பு சந்தைத்தோப்பு வளாகத்தில் உள்ள வாய்மூடி சித்தர் சுவாமிக்கு 107 வது குரு பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து அன்ன படையலுடன் மகா தீபாராதனை நடந்தது. குருபூஜையில் கலந்துகொண்ட அடியார்களுக்கு புத்தாடை, அன்னம் அளித்தனர்.பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன், குளோத்துங்கன், செங்குட்டுவன், சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.