திருச்செந்தூர் கடற்கரையில் மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2020 12:11
திருச்செந்தூர் : திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் இன்று மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையைத் தொடர்ந்து பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் இன்று மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. கடற்கரையில் வழக்கமான இடத்துக்கு பதில், கோயிலுக்கு அருகிலேயே கடற்கரையில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.