திருநள்ளாறு கோவில் சரஸ்வதி தீர்த்தக் குளம் தூய்மைப்படுத்தும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2020 03:11
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் உள்ள சரஸ்வதி தீர்த்தக் குளத்தை தூய்மைபடுத்தும் பணிக்கு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளாறு விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும் வாரம் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.கோவிலைச்சுற்றி மூன்று குளங்களில் பக்தர்கள் வசதிக்காக நளம் குளத்தில் புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது.மேலும் சனீஸ்வர பகவான் கோவிலைச்சுற்றி சரஸ்வதி தீர்த்தம். கோவில் நுழைவு வாயில் முன்பு பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த மூன்று தீர்த்தங்களை கோவில் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.மேலும் சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் சுற்றி காங்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி குளத்தில் தினம் இரண்டு வேலை கோவிலிலுள்ள யானை குளிப்பது வழக்கம் இதனால் யானை குளிப்பதற்கான போதிய வசதி இல்லாததால் குளத்தில் பராமரிப்பு பணி மற்றும் யானை குளிப்பதற்கான படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்வதால் கோவில் நிர்வாகம் சரஸ்வதி குளத்தில் உள்ள தண்ணீரை மெகா சைஸ் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் வெளியேற்றிய பின்னர் பணிகள் தொடங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.