பதிவு செய்த நாள்
09
டிச
2020
03:12
வாலாஜாபாத் : காஞ்சிபுரம் நகரம் மட்டுமல்லாது, பல கிராமங்களில், சிவன் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த கோவில்களில், வரும், 12ல், சனி பிரதோஷம் நடைபெற உள்ளது. குறிப்பாக, திம்மராஜம் பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில், படுநெல்லி நெல்லீஸ்வரர் கோவில், தேவரியம்பாக்கம் கோதாரீஸ்வரர் ஆகிய கோவில்களில், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணிக்கு, சனி பிரதோஷ பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டின், கடைசி சனி பிரதோஷம் இது.