புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.