கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலஇசை பாடபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் துாரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்திரண்டமுப் புரிநுால் திகழ்ஒளி மார்பும்சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞானஅற்புதம் நின்ற கற்பக் களிறே!முப்பழம் நுகரும் மூஷிக வாகனஇப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்தாயாய் எனக்குத் தானெழுந்து அருளிமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்துகுருவடி வாகிக் குவலயந் தன்னில்திருவடி வைத்துத் திறம் இதுபொருள்எனவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்கோடா யுதத்தால் கொடுவினை களைந்தேஉவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டிஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்துஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்துதலமொரு நான்கும் தந்தெனக் கருளிமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தேஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டிஆறா தாரத்து அங்குச நிலையும்பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டிமூன்றுமண் டலத்தின் முட்டிய துாணின்நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்குண்டலி அதனில் கூடிய அசபைவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்துமூலா தாரத்து மூண்டெழு கனலைக்காலால் எழுப்பும் கருத்தறி வித்தேஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்குமுத சகாயன் குணத்தையும் கூறிஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்சண்முக துாலமும் சதுர்முக சூட்சமும்எண்முக மாக இனிதெனக்கு அருளிப்புரியட்ட காயம் புலப்பட எனக்குத்தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்திகருத்தினில் கபால வாயில் காட்டிஇருத்தி முத்தி இனிதெனக்கு அருளிஎன்னை அறிவித்து எனக்கருள் செய்துமுன்னை வினையின் முதலைக் களைந்துவாக்கும் மனமும் இல்லா மனோலயம்தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்துஇருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்னஅருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்எல்லை இல்லா ஆனந்தம் அளித்துஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டிவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டிஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னைநெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்டவித்தக விநாயக! விரை கழல் சரணே!.