திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் வசதிக்காக 10 நாட்கள் திறந்திருக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2020 04:12
திருப்பதி: திருமலை திருப்பதியில் ஒரு மணி நேரம் முன்கூட்டியே வைகுந்தவாசல் திறந்துவிடப்பட்டதை அடுத்து பக்தர்கள் குளிரில் அதிகம் சிரமப்படாமல் விரைவாக சென்று வந்தனர்.
திருமலை திருப்பதியில் வைகுந்தவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு ஒரு நாள் என்று இருந்ததை பக்தர்கள் வசதிக்காக பத்து நாட்கள் திறந்து வைத்துள்ளனர். 25 ந்தேதி அதிகாலை துவங்கி ஜனவரி 5 ந்தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும்.நாளொன்றுக்கு இருபதாயிரம் பக்தர்கள் முன்னுாறு ரூபாய் கட்டணத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த டிக்கெட்டுகள் எல்லாம் ஆன்லைனில் விற்றுத்தீர்ந்துவிட்டது. தற்போது உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இலவசமாக வைகுந்தவாசல் வழியாக சென்று வர அனுமதி கொடுத்துள்ளனர். முதல் நாளான இன்று அதிகாலை திறக்க வேண்டிய வைகுந்தவாசலை ஒரு மணி நேரம் முன்கூட்டியே திறந்துவிட்டனர்.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.