Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : தை ராசிபலன் துலாம் : தை ராசிபலன் துலாம் : தை ராசிபலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
கன்னி : தை ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி : தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01

உத்திரம் 2, 3 4ம் பாதம் : சிறப்பான கிரக நிலை இந்த மாதத்தில் நிலவுகிறது. சிந்தனையில் வெளிப்படும் கருத்துக்கள் உண்மையை உணர்த்துவதால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். மனதில் தோன்றுவதை மிகவும் பக்குவமாகப் பேசி அடுத்தவர்களுக்கு புரிய வைத்து வெற்றி காண்பீர்கள். ராசிநாதனின் ஐந்தாம் இடத்துச் சஞ்சாரம் உங்கள் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். தனாதிபதியின் நிலை பொருளாதார நிலையை சிறப்பாக வைத்திருப்பதோடு சேமிப்பினையும் அதிகரிக்கச் செய்யும். பல்வேறு வழிகளிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வார்த்தைகளில் ஒருசில நேரத்தில் நம்மையும் அறியாமல் கடுமை வெளிப்படலாம். ஆயினும் அதனால் உண்டாகும் பிரச்னைகளை சமாளிக்கும் கலையை அறிந்திருப்பீர்கள். உடன்பிறந்தோரை ஒரு சில விஷயங்களுக்கு சார்ந்திருக்க வேண்டி வரும். தொலைதூரப் பிரயாணங்கள் அனுகூலத்தினைத் தரும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். அநாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மாதத்தின் துவக்கத்தில் காணும் எதிர்பாராத திடீர் பிரயாணங்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமையும். உறவினர்களுக்கு உங்களது ஆலோசனைகள் சிறந்த வெற்றியைப் பெற்றுத் தரும். சுயதொழில் செய்வோர் தங்கள் தனித்திறமையின் காரணமாக நல்ல லாபத்தினைக் காண்பார்கள். பூர்வீக சொத்துக்கள் நன்மையைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து முன்னேற்றம் காண முயற்சிப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் ஆதாயத்தைத் தருவதோடு நற்பெயரையும் பெற்றுத் தரும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத நற்பலன்களைக் காணும் நேரம் இது.
பரிகாரம் : வெற்றிவடிவேலவனை வணங்கி வரவும்.
சந்திராஷ்டமம் : ஜன. 20

அஸ்தம் : ராசிநாதனின் ஐந்தாம் இடத்துச் சஞ்சாரம் சிந்தனைகளில் வேகத்தினைக் கூட்டும். ஐந்தாம் ராசிக்கு அதிபதியான சனி பகவான் ஆட்சி பெற்ற பலத்துடன் ராசிநாதனோடு இணைவதால் நற்சிந்தனைகள் மனதினை ஆக்கிரமிக்கும். கற்பனையில் தோன்றுவதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பீர்கள். கறாராக பேசுவதாக எண்ணி நீங்கள் பேசும் வார்த்தைகள் அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும். குடும்பத்தில் லேசான சலசலப்பு தோன்றும். காரமான உணவுகளை மனம் விரும்பும். பொருளாதார நிலை தனாதிபதியின் பலத்தினால் உயரும். உடன்பிறந்தோரால் ஆதாயம் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக ஆதாயம் காண்பீர்கள். வண்டி, வாகனங்கள் புதியதாய் சேரும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். ராசிநாதனுடன் இணையும் சூரியன் உடல்நிலையை சற்று சோதித்துப் பார்ப்பார். உடல் உஷ்ண உபாதைகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயல்படுவீர்கள். மன விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள சற்று கூடுதலாக செலவழிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களினால் நல்ல ஆதாயத்தினைக் காண்பீர்கள். பிப்.யின் இரண்டாம் வாரத்தில் தொழில் ரீதியாக சற்று சிரமமான சூழலை உணரத் துவங்குவீர்கள். வியாபாரிகள் கடும் போட்டியினை சந்திக்க நேர்ந்தாலும் இறுதியில் வெற்றி காண்பார்கள். பொருளாதார ரீதியாக நேரம் நன்றாக இருப்பதால் சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. எண்ணிய விஷயங்களை நிறைவேற்ற திட்டமிட்டு சில முயற்சிகளை எடுப்பீர்கள். மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செய்து முடிக்க அவசரப்படுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : பௌர்ணமியில் சத்யநாராயண விரத பூஜை செய்து வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 21

சித்திரை 1, 2ம் பாதம் : ராசிநாதன் புதனின் சாதகமான சஞ்சார நிலையால் இந்த வாரத்தில் சிந்தனையில் இருப்பவற்றை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். ராசிநாதனோடு இணைந்திருக்கும் கிரகங்கள் மனதில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை அதிகரிக்கச் செய்வர். எதிர்கால நலன் கருதிய திட்டங்கள் நல்ல பயனைத் தரும். தனாதிபதியின் திருப்திகரமான நிலை பொருள்வரவை சீராக வைத்திருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகளுக்கிடையே மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். பேசும் வார்த்தைகளால் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த சிரமத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். உடன்பிறந்தோரின் நலனுக்காக உதவி செய்வீர்கள். வண்டி, வாகனங்கள் ஆதாயத்தினைத் தரும். முக்கியமான குடும்ப விவகாரங்களில் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. விருந்துகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள். உடல் உஷ்ண உபாதையால் அவதிக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளதால் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்ற மிகுந்த சிரத்தையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் கேளிக்கை, கொண்டாட்ட செலவுகள் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக போட்டியாளர்கள் உருவாவார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். வியாபாரிகள் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய தீவிர முயற்சி எடுத்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் ஆன்மிகப் பயணம் செல்வதற்காகத் திட்டமிடுவீர்கள். நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க சற்று அவசரப்படுவீர்கள். திட்டமிடுதலில் நிதானம் அவசியம். திறமையான பேச்சுக்கள் மற்றவர் மனம் கவரும் வகையில் அமையும். நன்மைகளைக் காணும் வாரம் இது.
பரிகாரம் : சண்டிகேஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : ஜன. 22

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar