Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : தை ராசிபலன் விருச்சிகம் : தை ராசிபலன் விருச்சிகம் : தை ராசிபலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
துலாம் : தை ராசிபலன்
எழுத்தின் அளவு:
துலாம் : தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01


சித்திரை 3, 4ம் பாதம் : நட்சத்ர அதிபதி செவ்வாயின் ஆட்சி பலம் வாழ்வியல் சூழலில் முன்னேற்றத்தைத் தரும். ஆயினும் அர்த்தாஷ்டம சனியின் காலம் துவங்கியுள்ளதால் அவ்வப்போது சிறுசிறு காரியத்தடைகளைக் கண்டு வருவீர்கள். சிந்தனையில் காட்டும் வேகம் செயலில் குறைவாகக் காணப்படும். தனாதிபதியின் திருப்திகரமான நிலை பொருளாதார நிலையை ஒரே சீராக வைத்திருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவி வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் விஷயத்தில் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதால் பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டாகும். குடியிருக்கும் வீட்டை அலங்கரிப்பதில் மனம் தனி ஈடுபாடு கொள்ளும். ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் இல்லத்தில் சேரும். சுகமான வாழ்வியல் நிலை தொடர்ந்து இருந்து வரும். தீவிரமான சிந்தனைகள் மனக்குழப்பத்தினைத் தோற்றுவிக்கலாம். வண்டி, வாகனங்கள் சேரும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தாயார் வழி சொத்துக்களால் ஆதாயம் காணலாம். பிள்ளைகளின் செயல்கள் பெருமையைத் தரும் வகையில் அமைவதோடு அவர்களின் வாழ்வியல் நிலை உயரக் காண்பீர்கள். உங்களுடைய சிந்தனைகளும், கருத்துக்களும் கற்றோர் மத்தியில் நன்மதிப்பினைப் பெறும். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் ஆதாயம் காண்பீர்கள். அநாவசிய செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பாகப்பிரிவனை பிரச்னைகள் சாதகமான முடிவினைத் தரும். பெற்றோருடன் ஆன்மிகப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன்பணிவோரின் துணையுடன் சிறப்பாக செயல்படுவார்கள்.  லாபாதிபதி சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகள் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் சிறிது கவனத்தோடு செயல்பட வேண்டியிருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்படுவீர்கள். மொத்தத்தில் நற்பலன்களைக் காணும் மாதம் இது.
பரிகாரம் : மாட்டுப்பொங்கல் திருநாளில் நந்தியம்பெருமானை வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 23

சுவாதி : நட்சத்திர அதிபதி ராகுவின் நீச பலத்தால் ஒரு சில மன சஞ்சலங்களுக்கு ஆளானாலும், ராசிநாதன் சுக்ரனின் சாதகமான சஞ்சாரம் துணைபுரிய இந்த மாதத்தில் அனுகூலமான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். ராசிநாதனின் சுக ஸ்தான சஞ்சாரம் ஜன. 30ம் தேதி முதல் வாழ்வியல் நிலையை உயர்த்தும். தனாதிபதியின் நிலை உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அர்த்தமுள்ள, பொறுப்பான வார்த்தைகளை வெளிப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடலாம். தகவல்தொடர்பு சாதனங்கள் ஆதாயத்தைத் தரும். புதிய பெண் நண்பர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக இருக்கும். வண்டி, வாகனங்களால் நன்மை காண்பீர்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். உல்லாசப் பயணத்திற்காக திட்டமிடுவீர்கள். பிள்ளைகளால் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உங்கள் சிந்தனைகளும், கருத்துக்களும் உங்கள் மதிப்பினை உயர்த்தும். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையுடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பால்ய சிநேகிதர் ஒருவருடனான சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். பூர்வீக சொத்துக்களால் நன்மை காண்பீர்கள். தொழில் ரீதியாக ஸ்திரத் தன்மை உருவாகும். உத்யோகஸ்தர்கள் குரு பகவானின் அனுகூலமான பார்வையால் பதவி உயர்வினைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். தொழில்முறையில் நண்பர்களின் உதவியை நாடவேண்டிய சூழல் உருவாகும். தொழில் ரீதியாக ஸ்திரத்தன்மையைக் காண்பீர்கள். தகப்பனார் வழி உறவினர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பரிகாரம் : அபிராமி அந்தாதி படித்து வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 23

விசாகம் 1, 2, 3ம் பாதம் : அர்த்தாஷ்டம சனி துவங்கியிருந்தாலும் சாதகமான கிரகநிலையைப் பெற்றிருப்பதால் நற்பலன்களைக் காண உள்ளீர்கள். சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் நட்சத்ர அதிபதி குருவின் அருள் அதனை வெற்றி கொள்ளச் செய்யும். தனாதிபதியின் நிலை உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுத் தரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்களின் துணையுடன் அலைச்சலைத் தவிர்த்து இருந்த இடத்திலேயே செய்ய வேண்டிய பணிகளில் வெற்றி காண்பீர்கள். வீடு, மனை ஆகிய இனங்கள் ஆதாயத்தினைத் தரும். வண்டி, வாகனங்களால் நன்மை காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையைக் காண்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக புதிய முயற்சியில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். கடன்பிரச்னைகள் சுமூக தீர்வினைக் காணும். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையுடன் லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். நண்பர்களின் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டிய சூழல் தோன்றலாம். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பால்ய சிநேகிதர் ஒருவரை சந்திப்பதன் மூலம் பழைய நினைவுகளில் மூழ்கி மனமகிழ்ச்சி கொள்வீர்கள். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. தொழில் முறையில் சிறப்பான நிலையைக் காண்பீர்கள். கூட்டுத்தொழிலில் உள்ள நண்பர்களால் ஒரு சில தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாகலாம். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்கு உதவ வேண்டியிருக்கும். வியாபாரிகள் தனலாபத்தின் அளவை உயர்த்தும் முயற்சியில் வெற்றி காண்பர். தொழில்முறையில் தொலைதூர பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நன்மை தரும் மாதம் இது.

பரிகாரம் : கோபூஜை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம் : ஜன. 24

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar