Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : தை ராசிபலன் மேஷம்: மாசி மாத ராசி பலன் மேஷம்: மாசி மாத ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
மீனம் : தை ராசிபலன்
எழுத்தின் அளவு:
மீனம் : தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01


பூரட்டாதி 4ம் பாதம்: ராசிநாதனின் நிலை மட்டுமல்லாது மற்ற கிரகங்களின் நிலையும் சிறப்பாக இருப்பதால் சிறப்பான நேரத்தைக் கண்டு வருகிறீர்கள். சுக்ரனின் 10ம் இடத்துச் சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்துவதோடு எண்ணிய காரியங்களில் உழைப்பின் மூலமாக வெற்றியை அடையச் செய்யும். புதன் லாப ஸ்தானத்தில் அமர்வதால் ஏதேனும் ஒருவகையில் பொருள் வரவு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். நேரம் நன்றாக இருப்பதால் சேமிப்புகள் உயரும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் இருந்து வந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. உடன்பிறந்தோருடன் தோன்றும் கருத்து வேறுபாட்டினை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுவது நல்லது. வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிட்டும். தாயார் வழி சொத்துக்களால் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் சிந்தனைகள் மற்றவர்களால் புகழப்படும். பிள்ளைகளால் பெருமைகொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். அதிகமாக உழைத்து வரும் அதே நேரத்தில் உடல்நிலையிலும் சிறிது கவனம் கொள்வது நல்லது.வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்க்கும். கௌரவச் செலவுகள் சற்று கூடுவதால் லேசான மன வருத்தம் தோன்றும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும், இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்வதிலும் மனநிம்மதி காண்பீர்கள். தொழில்நிலை சிறப்பாக இருந்து வரும். வியாபாரிகள் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்தி சிறப்பான தனலாபத்தைக் காண்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்கள் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். பெயர் புகழ் கூடும். உங்களது செயல்கள் அடுத்தவர்களின் பாராட்டினைப் பெறும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். ஏதோ ஒரு வகையில் தனலாபம் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டும்.சிறப்பான நற்பலனைக் காணும் நேரம் இது.
பரிகாரம் : ஐஸ்வர்யேஸ்வரரை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : பிப். 3

உத்திரட்டாதி : ராசிநாதனின் வலுவான நிலை உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் கூடுதல் நன்மையைத் தரும். ஜன. மாதத்தின் இறுதியில் 11ம் இடத்தில் இணையும் சுக்ரன் நினைத்த காரியத்தில் வெற்றியினைப் பெற்றுத் தருவார். உங்கள் உழைப்பின்  பெருமையை மற்றவர்கள் உணரும் வகையில் இந்த நேரம் அமையும். தனாதிபதி சொந்த வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்திருப்பதால் மறைமுக சேமிப்புகள் உயரும். உங்கள் வார்த்தைகள் நல்ல மதிப்பினைப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். ருசியான உணவுப் பண்டங்களின் மீது தனி ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த நன்மை காண்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் அசாத்தியமான தைரியமும் குடிபுகும். இதனால் செய்யும் செயல்களின் வெற்றி உறுதியாகும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் கண்டு வரும் அதே நேரத்தில் அநாவசியமான பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் செலவுகளைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் கௌரவம் உயரும்.வாழ்க்கைத்துணையின் வாயிலாக காரிய வெற்றிகளைச் சந்திப்பீர்கள். நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். அடுத்தவர்கள் வாங்கும் கடனுக்கு நீங்கள் பொறுப்பாளியாக வேண்டிய வாய்ப்பு உள்ளதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். தொழில் நிலை சிறப்பாக இருப்பதோடு குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினையும் பெற்றுத் தரும். கௌரவம் கருதி ஒரு சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். ருசியான உணவுப் பண்டங்களினால் உடல்நிலை கெடும் வாய்ப்பு உள்ளதால் சற்று கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உதவி செய்ய நேரிடும். உறவினர்களால் ஒரு சில தர்மசங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.மொத்தத்தில் சிறப்பான நற்பலன்களைக் காணும் நேரம் இது.

பரிகாரம் : குபேர மகாலட்சுமியை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : பிப். 3, 4

ரேவதி : ராசிநாதன் குருவும் நட்சத்திர அதிபதி புதனும் நினைத்ததை நடத்தி முடிக்கும் 11ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரிப்பதால் வலுவான கிரக அமைப்பைப் பெற்றிருக்கிறீர்கள், வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் சூரியன், புதன், குரு, சனி ஆகிய நால்வரும் அமர்ந்திருப்பதால் பல்வேறு வழிகளிலும் வெற்றி காண்பீர்கள். தனாதிபதியின் ஆட்சி நிலை சேமிப்பை உயர்த்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். உங்களின் திறமையான பேச்சுக்கள் மற்றவரை மனதினை கொள்ளை கொள்ளும். உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்கள் உருவாகலாம். வண்டி, வாகனங்களால் செலவினங்களை சந்திக்க நேரிடும். தாயார் வழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகக் காண்பீர்கள். முதுகு வலிப் பிரச்னையால் ஒருசிலர் அவதிப்படுவார்கள்.நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டுமுயற்சிகள் நல்ல வெற்றியைப் பெற்றுத் தரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் முயற்சிகளில் எளிதாக வெற்றி காண்பீர்கள். கேளிக்கை, கொண்டாட்டங்கள், விருந்துகள் ஆகியவற்றிற்காக அதிகம் செலவழிப்பீர்கள். தொழில் முறையில் உங்கள் செயல்திட்டங்கள் ஆதாயத்தினைத் தரும் வகையில் இருக்கும். 11ம் இடமாகிய லாப ஸ்தானத்தில் வலுப்பெற்று அமர்ந்திருக்கும் கிரகங்கள் சிறப்பான தனலாபத்தினைத் தருவார்கள். இரவினில் நிம்மதியான உறக்கம் கெடும் வாய்ப்பு உள்ளது. வண்டி, வாகனங்களால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்கலாம். உறவினர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. உடன்பிறந்தோரின் நலனுக்கு அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள். அவ்வப்போது திறமையான பேச்சுக்களின் மூலம் மற்றவர்களின் மனம் கவர்வீர்கள். நண்பர்களின் துணையுடன் நெடுநாள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மொத்தத்தில் சுகமான அனுபவங்களைக் காணும் நேரம் இது.

பரிகாரம் : காமதேனு வழிபாடு செய்து வாருங்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: பிப். 4

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar