Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : தை ராசிபலன் மீனம் : தை ராசிபலன் மீனம் : தை ராசிபலன்
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
கும்பம் : தை ராசிபலன்
எழுத்தின் அளவு:
கும்பம் : தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01


அவிட்டம் 3, 4ம் பாதம் : செவ்வாய், ராகு, கேதுவைத் தவிர மற்ற கிரகங்களின் சாதகமற்ற சஞ்சார சூழலில் சற்று சிரமத்தினைத் தரும் காலத்தை சந்திக்க உள்ளீர்கள். ராசிநாதனின் 12ம் இடத்து வாசம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் ஒரு சில தடங்கல்களைத் தோற்றுவிக்கும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருந்து வரும் அமைப்பு தொடரும். ஆயினும் தனகாரகன் சுக்ரனின் 11ம் இடத்து சஞ்சாரம் ஜன. 29ம் தேதி வரை பொருளாதார நிலையை உயர்த்திப் பிடிக்கும். பொருள் வரவு தடையேதுமில்லாமல் தொடரும். சேமிப்புகள் உயரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். நாம் நன்மையே செய்தாலும் அடுத்தவர்கள் நம்மைத் தவறாக எண்ணும் நிலை உருவாகக்கூடும். வண்டி, வாகனங்கள் பயனுள்ள வகையில் அமையும். பிப்.யின் தொடக்கத்தில் திடீர் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் ஒரு சில செலவினங்கள் உருவாகும். உடல்நிலையில் அவ்வப்போது தோன்றும் சிறுசிறு பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் கவனித்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். ஒரு சில குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் மூலமாகத் தீர்வு காண்பீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். முன்பின் பழக்கமில்லாத நபர்களுக்கு உதவி செய்வதால் ஒரு சில உபத்திரவங்களுக்கு ஆளாக நேரிடும். தொழில் ரீதியாக லேசான அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். நன்மையே செய்தாலும் தவறாகப் பேசும் நபர்களை நினைத்து மன வருத்தம் கொள்வீர்கள். உத்யோகஸ்தர்கள் சற்று சிரமத்தினை சந்திக்க வேண்டி இருக்கும். முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவி செய்யப் போய் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. நினைத்த காரியம் எளிதில் முடியாததால் மனதில் வருத்தம் தோன்றும். கோபத்தினை உடனிருப்பவர்களிடம் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. 12ம் இடம் வலுப்பெறுவதால் எல்லா விஷயங்களிலும் சிறிது சிரமத்தினைச் சந்திக்க வேண்டிய காலம் இது.
பரிகாரம் : பிட்சாடனரை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : பிப். 1

சதயம் : தை மாதத்தின் துவக்கத்தில் செயல்திறன் அதிகரிப்பதோடு மனதில் புதிய உத்வேகத்தினையும் பெறுவீர்கள். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. ராசிநாதனின் 12ம் இடத்துச் சஞ்சாரம் தொடங்கியிருப்பதால் சற்று சிரமமான சூழலை சந்திக்க நேரிடும். ஆயினும் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் செயல்களில் வேகம் கூடும். வெற்றி பெற சிறிது அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் நட்சத்ர அதிபதி ராகுவின் துணையால் ஒருவித புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். தை மாதத்தின் முற்பாதியில் நன்றாக இருந்து வரும் சுக்னின் நிலை பிற்பாதியில் மாறுகிறது. 12ம் இடத்தில் இணையும் சுக்ரன் பிப்.யின் துவக்கத்தில் ஆடம்பர செலவுகளை அதிகமாக்குவார். பேசும் வார்த்தைகளால் நெருங்கியவர்களோடு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். குடும்ப விவகாரங்களில் அந்நியர் ஒருவரின் தலையீட்டினால் நிம்மதி இழக்கும் சூழ்நிலை உருவாகலாம். உடன்பிறந்தோரின் செயல்கள் ஒரு சில பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். தகவல் தொடர்பு சாதனங்களால் சிறிது சிரமத்திற்கு ஆளாவீர்கள். வீடு. வாகனங்களால் ஆதாயத்துடன் கூடிய சுகமான வளர்ச்சி உண்டு. எதிர்காலம் பற்றிய தீவிர சிந்தனை மனதில் குடிபுகும். பிள்ளைகளால் கௌரவம் உயரக் காண்பீர்கள்.6, 8, 12க்குடையோரின் இணைவு விபரீத ராஜ யோக அமைப்பைத் தோற்றுவிக்கும். ஒரு சில திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானத்துடன் முடிவெடுத்தீர்களேயானால் வெற்றி நிச்சயம். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். உத்யோக ரீதியாக சற்று அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு திடீர் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. பேசும் வார்த்தைகளால் அடுத்தவர்களின் மனக்கசப்பிற்கு ஆளாகக் கூடும். ஆதாய விரயத்தில் சரிசம பலனைத் தரும் காலம் இது.

பரிகாரம் : அகோர வீரபத்திரரை வழிபட்டு வரவும்.
சந்திராஷ்டமம் : பிப். 1, 2

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் : தைரிய ஸ்தானத்தில் செவ்வாயின் உச்ச பலம் துணையிருப்பதால் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எல்லா விஷயங்களிலும் கௌரவம் எதிர்பார்ப்பீர்கள். சிந்தனையின் தீவிரம் முகத்தில் வெளிப்படும். ராசிநாதனின் 12ம் இடத்துச் சஞ்சாரம் சற்று கூடுதல் அலைச்சலை உண்டாக்கும். 12ம் இடம் வலுப்பெற்றுக் காணப்படுவதால் நினைத்த காரியங்கள் அவ்வளவு எளிதாக முடியாமல் சற்று இழுபறியைத் தோற்றுவிக்கும். தனாதிபதியின் நிலை அநாவசிய செலவுகளைத் தந்து கையிருப்பைக் கரைக்கக்கூடும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தகவல் பரிமாற்றங்களில் உண்டாகும் தாமதத்தினால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதே போன்று தகவல் பரிமாற்றங்களில் உண்டாகும் குழப்பமும் குடும்ப உறுப்பினர்களிடையே மனக் கசப்பை உருவாக்கக்கூடும்.ஜன. மாத இறுதியில் பிரயாணத்தினைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். அவ்வப்போது தோன்றும் முன்கோபத்தினைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் தடைகள் உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வெளியூர் பிரயாணத்தின்போது பொருளிழப்பிற்கான வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தொழில்நிலை சீராக இருந்து வரும். வியாபாரிகள் அவசரப்படாமல் பொறுமை காத்து வருவது நல்லது. 12ம் இடம் வலுப்பெற்று இருப்பதால் உத்யோகத்திலும் சற்று சிரமத்தினை சந்தித்து வருகிறீர்கள். வாழ்க்கைத்துணையின் நெடுநாள் விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களால் செலவுகளுக்கு ஆளாக நேரிடும். மிகுந்த தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வருவீர்கள் என்றாலும் திடீரென்று உண்டாகும் முன்கோபத்தினால் அவப்பெயர் அடைய நேரிடும்.சிரமமான நிலை இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டீர்களேயானால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் : ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : பிப். 2

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar