பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தில் கனகவல்லி தாயார் சமேத பூமிநீளா சமேத ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் கோவில், ரக்ஷாஜாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கடந்த 1ம் தேதி காலை 7:00 மணிக்கு சுதர்சன ேஹாமத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் அமைச்சர் சம்பத், முன்னாள் துணைச் சேர்மன் சம்பந்தம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.