பதிவு செய்த நாள்
04
பிப்
2021
06:02
பொங்கலூர்: பொங்கலூர் ஸ்ரீ சௌந்தர நாயகி உடனமர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஸ்ரீ நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த பிப்., 1 ல் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்ணாகுதி, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. பிப்.,2 ல் அஸ்த்ர ஹோமம், தீர்த்த ஸங்கரஹணம், அக்னி சங்கரஹணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், ரக்ஸாபந்தனம், கும்ப ஸ்தாபனம், கலாகர்ஷனம், அபிஷேக ஆராதனை, குரு பூஜை வழிபாடு, அம்மன் யாகசாலைக்கு எழுந்தருளல், முதற்கால யாக பூஜை ஆகியவை நடந்தது.
நேற்று முன்தினம் விசேஷ சந்தி, சிவாச்சாரியார்கள் வழிபாடு, இரண்டாம் கால யாகபூஜை, கோபுர கலசம் வைத்தல், பரிகார தெய்வங்கள் எந்திர ஸ்தாபனம், வேதிக பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை,4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், சங்கல்பம், 7:00 மணிக்கு கடம் புறப்பாடு, 7: 45 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 8 :15 மணிக்கு பரிவார தெய்வங்கள், சிவாலய தெய்வங்கள் மற்றும் நீலகண்டி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கல்யாணபுரி ஆதீனம், 57 ம் குரு சந்நிதானம் சரவணமாணிக்கவாசக சுவாமி, கோவை கூனம் பட்டி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கண்டியம்மன் திருக்கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.