பதிவு செய்த நாள்
11
பிப்
2021
12:02
திருப்பூர் : வானில் வலமும், இடமுமாக சுற்றி வரும் கிரகங்களின் சஞ்சாரமே, உலகில் நன்மை, தீமைகளை நிகழ்த்துகிறது என்பது ஐதீகமாக உள்ளது.
அனைத்து கிரகங்களும், இறைவனுக்குள் அடக்கம் என்றாலும், சஞ்சாரத்தை பொறுத்து காலசூழ்நிலை மாறுபடுகிறது. கடந்த பிப்., மாதம், தனுசு ராசிக்குள் ஆறு கிரகங்கள் சங்கமித்து, கொரோனா உள்ளிட்ட பல சவால்களை உருவாக்கியது. நீண்ட இடைவெளிக்கு பின், நேற்று துவங்கி, நாளை இரவு வரை, மகர ராசியில் ஆறு ராசிகள் ஒரே கட்டத்தில் நிற்கின்றன. குறிப்பாக, அனைத்து ராசிகளும், ராகு மற்றும் கேது ஆகிய நிழல் கிரகங்களின் பிடியில் சிக்கியுள்ளதால், இறைவழிபாடு அவசியம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து, திருப்பூர் திருவருள் ஜோதிட ஆராய்ச்சி மைய பேராசிரியர் மீனம் ராஜூ கூறியதாவது: இன்று துவங்கி 12ம் தேதி நாளை வரை, மகரம் ராசியில், சூரியன், சந்திரன், சனி, குரு, புதன், சுக்கிரன் ஆகிய ஆறு ராசிகள் சேர்கின்றன. அனைத்து கிரகங்களும், ராகு, கேது பிடிக்குள் வருவது, காலசர்ப்ப தோஷம்.சிவாலய வழிபாடு, அம்மன் வழிபாடு, மகா விஷ்ணு வழிபாட்டின் மூலம் கெடுதல் வருவதை தவிர்க்கலாம். இந்த நாட்களில், பேச்சை குறைத்து, இறை சிந்தனையில் மனதை நிறுத்த வேண்டும். இதைவிட, கோவில்களில் கூட்டு பிரார்த்தனை நடத்துவது அபாரமான நன்மையை அளிக்கும். குரு வக்கிரமாகியுள்ள நேரத்தில், ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் கூடுவதாலும், காலசர்ப்ப தோஷத்தாலும், அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சுவாமி படத்தின் முன் தீபம் ஏற்றி வைத்து, தியானமும், வழிபாடும் செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.குரு வக்கிரமாகியுள்ள நேரத்தில், ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் கூடுவதாலும், காலசர்ப்ப தோஷத்தாலும், அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.