Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : மாசி மாத ராசி பலன் கன்னி : மாசி மாத ராசி பலன் கன்னி : மாசி மாத ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம் : மாசி மாத ராசி பலன்
எழுத்தின் அளவு:
சிம்மம் : மாசி மாத ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
08:02

மகம் :    இந்த மாதத்தின் துவக்கத்தில் சற்று சிரமத்தினைக் காண நேர்ந்தாலும் பிப்ரவரி 19ம் தேதி முதல் தடையேதுமின்றி உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்வீர்கள். செல்லும் பாதையில் இருந்து வரும் தடைக்கற்களை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ‘இதனை இவன் செய்து முடிப்பான்’ என்பதைப் பிரித்தறிந்து பொறுப்புகளை பங்கிட்டு வேலை வாங்குவதில் தனித்துவம் காண்பீர்கள். பொதுப்பணிகளில் அதிகம் பங்கேற்க வேண்டிய சூழல் உருவாகக்கூடும். இதனால் குடும்பத்தில் லேசான சலசலப்புகளை சந்திக்க நேரலாம். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. மனதில் துணிவினையும், அசாத்தியமான தைரியத்தையும் கொண்டிருப்பீர்கள். பிப்ரவரி 23ம் தேதி முதல் எதிர்பார்த்திருந்த பணவரவினைக் காண்பீர்கள். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் விவேகமான கருத்துக்களால் சுயகவுரவம் உயரும். உடன்பிறந்தோரால் அதிக செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் உண்டாகும். அந்நியப் பெண்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களை மாற்றும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். பிரயாணத்தின்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உறவினர்களின் வழியில் ஒரு சில கலகங்களை சந்திக்க நேரலாம். மாணவர்களின் கல்வி நிலை மேன்மை அடையும். முக்கியமான நேரத்தில் பிள்ளைகளின் ஆலோசனை கைகொடுக்கும். மாதத்தின் முற்பாதியில் கடன் பிரச்னைகள் தலைதூக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். திட்டமிட்டிருந்த ஆன்மிகப் பயணம் தள்ளிப்போவதற்கான வாய்ப்பு உண்டு. வேலைக்காரர்களால் வீட்டிலும், அலுவலகத்திலும் புதிய பிரச்னைகள் தோன்றலாம். தொழில்முறையில் அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். தடைக்கற்களை வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்ளும் நேரம் இது.


பரிகாரம் : காஞ்சி காமாட்சி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 14, மார்ச் 13

பூரம் :     இந்த மாதத்திய கிரக நிலையின்படி உங்களது உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். அளவுக்கதிகமான டென்ஷனும், தீவிரமான சிந்தனைகளும் உடல்நிலையில் சிரமத்தினைத் தரலாம். ஆறாம் பாவத்தில் உள்ள கிரகங்களின் நிலையால் உங்களது போட்டியாளர்கள் வலுப்பெறுவார்கள். மறைமுக எதிரிகளை சமாளிப்பதற்கு அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டி இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடக்கூடாது. தனாதிபதியும் ஆறாம் இடத்தில் அமர்வதால் பொருள்வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். நேரடியாக செய்ய முடியாத செயல்களை தகவல் தொடர்பு சாதனங்களால் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களின் ஆலோசனைகளின்படி செயல்படுவதை விட உங்களது தனிப்பட்ட எண்ணங்களை செயல்படுத்துவது நல்லது. மாற்றுமொழி பேசும் பெண்டிரால் நன்மை உண்டாகும். நினைப்பதை உடனுக்குடன் செயல்படுத்த முயற்சிப்பீர்கள். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து படிக்கும் முறையில் குறிப்பிடத்தகுந்த நன்மை காண்பார்கள். வண்டி, வாகனங்கள் மற்றும் பிரயாணங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. முடிவு தெரியாமல் இருந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட நேரிடும். அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நலம். உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள தியானம், யோகா பயிற்சிகள் நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள். சுபசெலவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் பிரச்னைகள் தோன்றும். தொழில்நிலை சிறப்பாக இருந்து வரும். வியாபாரம் சிறப்பாக இருந்தாலும் உடனடியாக வசூல் செய்ய இயலாது போகும். மொத்தத்தில் எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் காத்திருப்பது நல்லது. சுமாரான பலன்களை உண்டாக்கும் மாதம் இது.

பரிகாரம் : சக்கரத்தாழ்வார்
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 15

உத்திரம் 1ம் பாதம் :     இந்த மாதத்தில் ராசிநாதனும் நட்சத்திர அதிபதியும் ஆகிய சூரியனின் நிலை ஏழாம் இடத்தை வலுப்பெறச் செய்வதால் நண்பர்களின் துணையோடு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த செயலைச் செய்து முடிப்பீர்கள். ராசிநாதனோடு சுக்ரனின் இணைவும் பிப்ரவரி 23ம் தேதி முதல் நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும். சமயோஜிதமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான சூழலில் விரைவாக உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பொருளாதார நிலை உயரத் தொடங்கும். அடுத்தவர்களிடம் பேசும்போது மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து வார்த்தைகளை பிரயோகிப்பீர்கள். உடன்பிறந்தோரால் உதவி உண்டாகும். வீடு, வண்டி, வாகனங்கள் போன்ற இனங்களில் ஆதாயம் காண்பீர்கள். பிரயாணங்களில் எதிர்பார்த்த பலன் கிட்டும். பிள்ளைகளின் மனமகிழ்ச்சிக்காக இன்பச்சுற்றுலா செல்ல வேண்டிய சூழல் உருவாகலாம். பொழுதுபோக்கு விஷயங்கள், கேளிக்கை, கொண்டாட்டம், விளையாட்டு ஆகியவற்றை மனம் விரும்பும். நினைத்த காரியங்கள் எளிதில் நடைபெறும். குடும்பத்து பெரியவர்களின் துணையுடன் பரம்பரையைப் பற்றி அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்யும் போது சிறிது சிரமத்தினை சந்தித்தாலும் அதை பெரிதாக எண்ணமாட்டீர்கள். சுபசெலவுகளை சந்திக்க வேண்டிய நேரம் இது. தொலைதூரப் பிரயாணங்களை தகுந்த துணையுடன் மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உருவாகும். தொழில் ரீதியாக உங்கள் எண்ணம்போல் செயல்பட்டு திருப்தி காண்பீர்கள். நண்பர்களின் துணையுடன் செய்து வரும் கூட்டுத்தொழில்கள் வெற்றியைத் தரும் வகையில் அமையும். நற்பலனைக் காண்பதோடு கவுரவமும் உயரும் மாதம் இது.
பரிகாரம் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 15, 16

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar