Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : மாசி மாத ராசி பலன் சிம்மம் : மாசி மாத ராசி பலன் சிம்மம் : மாசி மாத ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கடகம் : மாசி மாத ராசி பலன்
எழுத்தின் அளவு:
கடகம் :  மாசி மாத ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
08:02

புனர்பூசம் 4ம் பாதம் :     உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களின் நிலையினால் வெளியுலகத் தொடர்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியோடு பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை நேரடியாக பேச்சின் மூலமாக அல்லாது உங்களது எழுத்துக்களின் மூலமாக சாதித்துக்கொள்வீர்கள். அரசுத் தரப்பு உதவிகள் உங்களது மனுக்களின் மூலம் வந்து சேரும். செலவுகள் கூடினாலும் பொருள் வரவு நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்களால் புதிய நண்பர்கள் சேருவார்கள். வண்டி, வாகனங்களால் தொந்தரவுகள் தோன்றும் வாய்ப்பு உண்டு. முடிந்தவரை வெளியூர் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்களது அமைதியான நடத்தை மற்றவர்கள் மனதினைக் கவரும் வகையில் அமையும். சிந்தனைகளில் வேகத்துடன் விவேகமும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். அடுத்தவர்களின் குடும்ப பிரச்னைகளைத் தீர்க்க முயலுவீர்கள். சிக்கலான சமயங்களில் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். குடும்பப் பெரியவர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். தொற்று நோய்களுக்கான வாய்ப்பு உண்டு என்பதால் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. இந்த மாதத்தில் பணி நிமித்தம் காரணமாக வாழ்க்கைத்துணையோடு செலவழிக்கும் நேரம் குறையலாம். தம்பதியருக்குள் கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி தோன்றக்கூடும். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொள்வீர்கள். தொலைதூர ஆன்மீகப் பிரயாணங்கள் செல்வதற்கான முன்னேற்பாடுகளில் இறங்க நேரிடும். கூட்டுத்தொழில் சிறப்பாகச் செல்லும். வியாபாரிகள் அடைகின்ற தனலாபத்தை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்வது நல்லது. நன்மையைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : ஸ்ரீ தன்வந்திரி பகவான்
சந்திராஷ்டமம் : மார்ச் 11

பூசம் :     பிப்ரவரி மாதத்தில் நற்பலனைக் காண உள்ள நீங்கள் மார்ச் மாதத்தில் சற்று சிரமப்பட்டு உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். நினைத்த காரியங்கள் சட்டென்று முடியாமல் இழுபறியைத் தரக்கூடும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க அடுத்தவர்களின் துணையை நாட வேண்டிய சூழல் உருவாகலாம். சுயமரியாதைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் உங்களுக்கு இந்த நிலை சற்று மன வருத்தத்தைத் தரக்கூடும்.


இயலாமையின் காரணமாக நீங்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது. பிடிவாத குணம் மனதில் அதிக இடம் பிடிக்கும். குடும்பத்தில் சலசலப்பினை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். மாதத்தின் முற்பாதியில் பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் பிற்பாதியில் அதற்கேற்ற செலவினங்களும் காத்திருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செல்வது நல்லது. முன்பின் தெரியாத நபர்களின் சாமர்த்தியமான பேச்சுக்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். நெடுநாட்களாக இழுபறியில் இருந்து வரும் சொத்துப்பிரச்னைக்கு இந்த மாதத்தில் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருந்து வரும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தத்தினைத் தோற்றுவித்தாலும் அவர்களது பெருமையைப் பேசுவதில் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். மனதில் தோன்றுவதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுவதால் ஒரு சில நேரத்தில் அவப்பெயரை சந்திக்க நேரிடலாம். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கணவன்-மனைவியிடையே பரஸ்பரம் கருத்தொற்றுமை அதிகரிக்கும். மாதத்தின் பிற்பாதியில் கவுரவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். தொழில்முறையில் அதிகாரமான பேச்சுக்களின் மூலம் உங்களின் செல்வாக்கினை நிலைநாட்டி வருவீர்கள். சுயதொழில் செய்வோர் தொழில்முறையில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க முயற்சிப்பார்கள். முற்பாதி சுகமாகவும் பிற்பாதி சுமையாகவும் அமையும் மாதம் இது.


பரிகாரம் : ஸ்ரீ சண்டிகேஸ்வர ஸ்வாமி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 13, மார்ச் 11

ஆயில்யம்:    இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடம் வலுப்பெறுவதால் சற்று சிரமத்தினை சந்திக்க நேரிடும். எளிதில் முடிந்துவிடும் என்று நினைத்து இறங்கிய செயல்களில் இழுபறியான நிலை நீடித்தாலும் முன்வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பீர்கள். மார்ச் மாதத்தில் உங்களது பொருளாதார நிலை சிறிது பின்னடவை சந்திக்கும். கையிருப்பு கரையத் தொடங்குவதால் குடும்பத்தில் லேசான சலசலப்பு ஆரம்பிக்கும். பேசும் வார்த்தைகளால் சிறிது பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனத்துடன் பேசுவது அவசியமாகிறது. கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டிய சூழல் உருவாகலாம். உடன்பிறந்தோரால் ஒரு சில தொல்லைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை எங்காவது மறந்து வைத்துவிட்டு அதனால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும். வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளின் அவசரமான செயல்பாடுகளால் ஒருசில செலவுகள் உண்டாகக்கூடும். பிதுரார்ஜித சொத்துக்களினால் ஆதாயம் காண்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டிய சூழல் உருவாகும். சிரமமான நேரத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொறாமையின் காரணமாக சிலர் உங்களுக்கு அவப்பெயர் தோற்றுவிக்க முயலுவர். செலவுகளைக் -குறைக்க சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல்நிலையைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிர்காலம் பற்றிய விஷயங்களில் வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு கொள்வீர்கள். நண்பர்களுக்காக உதவி செய்யப்போய் தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளப்படுவீர்கள். எட்டாம் இடம் வலுப்பெறுவதால் செலவுகளைக் குறைக்க இயலாது போகும். ஆன்மிகப் பயணங்கள் மனதிற்கு நிம்மதி தரும். நீங்கள் குருவாக மதிக்கும் நபரின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்க உள்ளீர்கள். சுமாரான பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : ஸ்ரீ விஜய கணபதி
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 13, மார்ச் 12

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar