ஏழை ஒருவர் நாயகத்திடம், ‘ நான் நிம்மதியுடன் குடியிருக்க வீடு கூட இல்லை” என முறையிட்டார். காபாவுக்கு அருகில் அழைத்து வந்து, ‘‘இதோ... இந்த இடத்தில் உமக்கு வீடு கட்டிக் கொள்ளும்” என்றார். அவர் கட்டிடப்பணி செய்யும் போது நாயகம் மண் குழைத்துக் கொடுத்தார். நான்கு புறமும் சுவர் எழுப்பிய பின், வீட்டிற்கு கூரை அமைக்கும் பணி தொடங்கியது. உயரமான சுவராக இருந்ததால் முகடு எட்டவில்லை. இதனை அறிந்து, “நண்பரே! நான் கீழே அமர்ந்து கொள்கிறேன்; நீர் என் தோளின் மீது ஏறி முகடு அமைக்கலாம்’’என்றார். அதிர்ந்து போன அவர், ‘‘உயர்ந்த மனிதரான தங்களின் தோள் மீது ஏறி பணி செய்ய விரும்பவில்லை’’ என அழுதார். அவரை சமாதானம் செய்து அமரச் செய்தார். கண்ணீர் சிந்தும் கண்களுடன் அவரும் முகடு அமைத்தார்.