முத்துமாரியம்மன் கோயிலில் மாசி-பங்குனி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2021 10:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. காரைக்குடி நகரின் முக்கியத்திருவிழாவான மாசி-பங்குனி திருவிழா நேற்று காலை 4:15 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. காலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, பால்குடம் அக்னிசட்டி, பூக்குழி, காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. காரைக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி-பங்குனி திருவிழா தொடங்கியதையடுத்து காரைக்குடியே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கணக்கர் அழகுபாண்டி செய்து வருகின்றனர்.