பதிவு செய்த நாள்
17
மார்
2021
03:03
ராசிபுரம்: ராசிபுரம், கைலாசநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், நகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால், மரம், கொடி வளர்ந்துள்ளது. குப்பை குட்டையாக மாறிவிட்டது. இந்நிலையில், கைலாசநாதர் சிவனடியார்கள் கூட்டம், தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன், நகராட்சி கமிஷனர் பிரபாகரன் தலைமையில், துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்படுத்தினர். இந்நிலையில் சேலம், திருத்தொண்டர்கள் திருச்சாலை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், தூர்வாரிய தெப்பக்குளத்தை பார்வையிட்டார். பின்னர் சிவனடியார்கள், தொண்டர்களிடம் ஆலோசனை செய்தார். தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறுத்துமளவுக்கு சுத்தம் செய்து, அழகுபடுத்த வேண்டும் என, பேசினார்.