திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு அனுமார் வாகனத்தில் பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் முன்னிட்டு மார்., 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று அனுமார் வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். வரும் மார்ச் 28., காலை 9 மணிக்கு மேல் நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.